ஐமேக்ஸ் திரையில் 'இந்தியன் 2' - படக்குழு அறிவிப்பு
|'இந்தியன் 2' படத்தின் புரொமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை,
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பாக திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும், ரசிகர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கமலை வைத்து இந்தியன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கி இருக்கிறார். இப்படத்தை லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.
இதில் சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், வெண்ணிலா கிஷோர், விவேக், மனோபாலா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.
வரும் 12-ம் தேதி இந்தியன் இரண்டாம் பாகம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதையொட்டி, படத்தின் புரமோசன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 'இந்தியன் 2' திரைப்படத்தை, ஐமேக்ஸ் திரைகளிலும் வெளியிடவுள்ளதாக பட நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.