'நடிப்பு மட்டுமில்லை அதுவும் எனக்கு பிடிக்கும்' - நடிகை ஷ்ரத்தா தாஸ்
|இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் வங்காள மொழிகளில் நடித்துள்ளார் நடிகை ஷ்ரத்தா தாஸ்.
சென்னை,
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஷ்ரத்தா தாஸ். இவர் இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் வங்காள மொழிகளில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய 18-வது வயதில் சினிமாவில் அறிமுகமானார்.
இந்நிலையில், இசை குறித்து நடிகை ஷ்ரத்தா தாஸ் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது,
'நடிப்பு மட்டுமில்லாமல், பாடுவதும் எனக்கு பிடிக்கும். எனக்கு இசையின் முன்னோடியாக இருந்தது என் அம்மாதான். அவர் பாடல்களை பார்த்தும் கேட்டும்தான் எனக்கு இசையில் ஆர்வம் வந்தது. இசை என்னை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. அது தியானம் போன்றது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் என்னுடைய இசைப் பயணத்தில் வழிகாட்டியாக இருந்தார். 2010ல் சார்மி கவுர் நடிப்பில் வெளியான 'சை ஆத்தா' படத்தில் கஜ்ஜேலா குர்ரம் என்ற பாடலைப் பாட அவர் எனக்கு வாய்ப்பளித்தார்.
இப்போது, பல வருடங்களுக்குப் பிறகு, நான் பாரிஜாத பர்வம் படத்தில் மீண்டும் பாடியுள்ளேன். இது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விரைவில் தெலுங்கு மற்றும் இந்தியில் எனது சொந்த தயாரிப்பில் பாடல்களை பாட திட்டமிட்டுள்ளேன்.' இவ்வாறு கூறினார்.