'ஹாரர் படத்தின் ரசிகை அல்ல ஆனால்...'- நடிகை தேஜஸ்வினி சர்மா
|'பெல்லடோனா' என்ற ஹாரர் படத்தின் மூலம் தேஜஸ்வினி சர்மா தமிழில் அறிமுகமாக உள்ளார்.
சென்னை,
கடந்த 2019-ம் ஆண்டு வெளியான தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தேஜஸ்வினி சர்மா. அதனைத்தொடர்ந்து, பிளாட் 9, மேரி மற்றும் இங்கிலீஷ் மஞ்சு போன்ற திரைப்படங்கள் மூலம் பிரபலமானர் இவர், தற்போது தமிழிலும் அறிமுகமாக உள்ளார்.
அதன்படி, தேஜஸ்வினி சர்மா தமிழில் அறிமுகமாக உள்ள படத்திற்கு 'பெல்லடோனா' எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் சூப்பர்நேச்சுரல் ஹாரர் கதைக்களத்தில் உருவாக உள்ளது. சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்கும் இப்படத்தை யூபோரியா பிளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 16 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் கதாநாயகனாக விமல் நடிக்கிறார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட தேஜஸ்வினி சர்மா, தான் ஹாரர் படங்களுக்கு பெரிய ரசிகை கிடையாது என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
"நான் ஹாரர் திரில்லர் படங்களுக்கு பெரிய ரசிகை இல்லை. ஆனால், அந்த படத்தில் நடிக்க பிடிக்கும். புதிய மொழிகளில் நடிக்க செல்லும்போது, ஆரம்பத்தில் பலருக்கு பெரிய ரோல் கிடைப்பதில்லை. ஆனால், எனக்கு இந்த படத்தில் நிறைய ஸ்கிரீன் ஸ்பேஸ் உள்ளது. இப்படக்குழுவுடன் படப்பிடிப்பில் இணைவதில் ஆர்வமாக உள்ளேன்' என்றார்.
நடிகை தேஜஸ்வினி சர்மா, தற்பொழுது அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2: தி ரூல் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.