'அது எப்போதும் சூப்பர் ஸ்பெஷல்தான்' - நடிகை நேஹா சர்மா
|பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நேஹா சர்மா.
மும்பை,
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் நேஹா சர்மா. இவர் 2007 ம் ஆண்டு வெளியான தெலுங்கு திரைப்படமான "சிருதா"படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் ராம் சரணுடம் நேஹா சர்மா நடித்திருந்தார்.
நேஹா சர்மா 2010 ம் ஆண்டு இம்ரான் ஹாஷ்மிக்கு ஜோடியாக "குரூக்" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியில் அறிமுகமானார். தற்போது இவர் நடித்து முடித்துள்ள படம் சட்டவிரோத சீசன் 3. இப்படம் கடந்த 29-ம் தேதி ஓடிடி -ல் வெளியானது. இந்நிலையில், நடிகை நேகா பட நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசியதாவது,
'குரூக்' எனது முதல் படமாகும், அது எனக்கு பார்வையாளர்களின் இதயத்தில் ஒரு தனி இடத்தைக் கொடுத்தது. அங்குள்ள எனது பார்வையாளர்களிடமிருந்து எனக்குக் கிடைத்த அன்பை, என்னால் அவர்களுக்கு ஒருபோதும் திருப்பிச் செலுத்த முடியாது. நான் எப்போதும் அவர்களுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன். முதல் படம் எப்போதும் சூப்பர் ஸ்பெஷல்தான்'.
'தற்போது சட்டவிரோத சீசன் 3 என்ற படத்தில் நடித்துள்ளேன். இதன் முந்தைய பகுதிகளை ரசிகர்கள் விரும்பாவிட்டால், இந்த சீசன் இருந்திருக்காது. நான் எனது வில்லன் காலத்தில் இருக்கிறேன் என்று சொல்லலாம், மக்கள் அதை எப்படி பார்க்கிறார்கள் என்பதை எதிர்பார்த்திருக்கிறேன்,' இவ்வாறு கூறினார்
இவர் தமிழில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளிவந்த 'ஜுங்கா' படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.