< Back
சினிமா செய்திகள்
Ilayaraja had darshan of Lord Shiva at Nellaiappar temple
சினிமா செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்த இளையராஜா

தினத்தந்தி
|
17 Jan 2025 11:04 AM IST

சமீப காலமாக வெளியான பல படங்களில் இவரது பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நெல்லை,

1976 ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் தனது வரலாற்றில் இதுவரை 1,000க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் 7,000 பாடல்களை எழுதி உள்ளார். அன்று முதல் இன்று வரை இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை. தனது தனித்துவமான இசையினால் ஏராளமான ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், நெல்லையப்பர், அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்துள்ளார்.

சமீபத்தில் இவரது இசையில் வெளியான 'விடுதலை 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சமீப காலமாக வெளியான பல படங்களில் இவரது பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்