< Back
சினிமா செய்திகள்
பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல்
சினிமா செய்திகள்

பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைவுக்கு இளையராஜா இரங்கல்

தினத்தந்தி
|
25 March 2025 9:53 PM IST

பாரதிராஜாவின் மகன் மனோஜ் மறைவுக்கு இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பாரதி ராஜா. இவரது இயக்கத்தில் கடந்த 1999-ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற படம் வெளியானது. இந்த படத்தின் மூலம் தனது மகன் மனோஜ் பாரதிராஜாவை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தினார். அதனை தொடர்ந்து மனோஜ் "சமுத்திரம், கடல் பூக்கள், ஈரநிலம், அன்னகொடி, ஈஸ்வரன், மாநாடு, விருமன்" உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2023-ம் வெளியான மார்கழி திங்கள் என்ற படத்தையும் மனோஜ் இயக்கியுள்ளார்.இந்த நிலையில் வீட்டில் இருந்த போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மனோஜ் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 48 என்பது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் நடிகர் மனோஜ் மறைவிற்கு இசையமைப்பாளர் இளையராஜா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். "என்னுடைய நண்பன் பாரதியின் மகனான மனோஜ் குமார் மறைந்த செய்தியை கேட்டு மிகவும் அதிர்ந்து போனேன். என்ன சொல்வது? எனக்கு வார்த்தை வரவில்லை. இப்படி ஒரு சோகம் பாரதிக்கு நிகழ்ந்து இருக்க வேண்டாம். நிகழ்வதை நம்மால் தடுக்க முடியாது ஏற்றுக் கொள்ள முடியாது என்று காலம் விதித்து இருப்பதால் மனோஜின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்" என்று வீடியொ பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்