< Back
சினிமா செய்திகள்
சிம்பொனி இசை வெளியீட்டு தேதியை அறிவித்தார் இளையராஜா
சினிமா செய்திகள்

சிம்பொனி இசை வெளியீட்டு தேதியை அறிவித்தார் இளையராஜா

தினத்தந்தி
|
31 Oct 2024 8:34 PM IST

தனது சிம்பொனி இசை வெளியீட்டு தேதியை இளையராஜா அறிவித்துள்ளார்.

சென்னை,

சிம்பொனி இசையை அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியிடப்போவதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "அனைவருக்கும் தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். இந்த நன்னாளில் லண்டனில் எனது சிம்பொனி இசையை ரெக்கார்ட் செய்தேன் என்பதையும், அந்த சிம்பொனி இசை அடுத்த ஆண்டு ஜனவரி 26-ம் தேதி வெளியிடப்படும் என்பதையும் உலகெங்கிலும் உள்ள இசை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் பதிவிட்டுள்ளார்.



மேலும் செய்திகள்