< Back
சினிமா செய்திகள்
If you prove it, I will definitely walk without clothes - Srireddy challenge
சினிமா செய்திகள்

'அதை நீங்கள் நிரூபித்தால் கண்டிப்பாக ஆடை இல்லாமல் நடப்பேன்' - ஸ்ரீரெட்டி சவால்

தினத்தந்தி
|
11 Jun 2024 9:19 AM IST

பவன் கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்து வந்தனர்.

சென்னை,

நடிகர்கள் மீது பாலியல் புகார் சொல்லி தெலுங்கு பட உலகை கலங்கடித்த நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து நடிகர் பவன் கல்யாணுக்கு எதிராகவும் சர்ச்சை கருத்துகளை வெளியிட்டு வந்தார். இதனால் பவன் கல்யாண் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்து வந்தனர். ஆந்திர தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தால் விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடையில்லாமல் நடப்பேன் என்று ஸ்ரீரெட்டி சொன்னதாகவும் ஒரு தகவல் பரவி வந்தது.

தற்போது ஜெகன் மோகன் கட்சி தோல்வி அடைந்துள்ள நிலையில், எப்போது ஆடை இல்லாமல் நடக்கப்போகிறீர்கள் என்று சமூக வலைத்தளதில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இதற்கு பதிலடி கொடுத்து ஸ்ரீரெட்டி கூறும்போது, "நான் ஆடை இல்லாமல் நடப்பேன் என்று எப்போதும் சொன்னது இல்லை. நான் அப்படி சொன்னேன் என்று ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள். எனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து எதையும் நான் நீக்கவில்லை. ஒருவேளை நான் அப்படி சொன்னேன் என்று நீங்கள் நிரூபித்தால் கண்டிப்பாக விசாகப்பட்டினம் கடற்கரையில் ஆடை இல்லாமல் நடப்பேன். உங்களுடைய கேலிக்கும், கிண்டலுக்கும் பயப்படுகிறவள் நான் இல்லை. உங்களை துணிச்சலாக எதிர்கொள்வேன்'' என்றார்.

மேலும் செய்திகள்