< Back
சினிமா செய்திகள்
இயக்குனர் சுகுமார் இல்லை என்றால் இன்று நான் இல்லை - அல்லு அர்ஜுன்
சினிமா செய்திகள்

இயக்குனர் சுகுமார் இல்லை என்றால் இன்று நான் இல்லை - அல்லு அர்ஜுன்

தினத்தந்தி
|
26 Nov 2024 11:01 AM IST

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' திரைப்படம் வருகிற டிசம்பர் 5-ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

கடந்த 2021-ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியான படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'புஷ்பா 2 தி ரூல்' படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 5-ந் தேதி உலகளவில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

இப்படத்தின் புரமோஷன் பணிக்காக படக்குழுவினர் பல இடங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த வகையில் நேற்று முன்தினம் தமிழ் புரமோஷனுக்காக சென்னை தாம்பரத்திற்கு படக்குழுவினர் வந்திருந்தனர். அந்த நிகழ்ச்சியில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீலீலா, நெல்சன் திலிப்குமார் மற்றும் பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் அல்லு அர்ஜுன் 'வணக்கம் தமிழ் மக்கள்' என்று தனது பேச்சை ஆரம்பித்தவர் முழுவதுமாக தமிழிலேயே பேசி அசத்தினார். அப்போது நடிகை ராஷ்மிகாவுடன் பணிபுரிந்த அனுபவம் மற்றும் நடிகை ஸ்ரீலீலாவின் நடன திறமை ஆகியவற்றை பற்றி பேசினார்.

பின்னர் இயக்குனர் சுகுமார் பற்றி உருக்கமான தகவல் ஒன்றை அல்லு அர்ஜூன் பகிர்ந்து கொண்டார். அதில் "நாடு முழுவதும் நாங்கள் படத்தை புரமோஷன் செய்யும் பணியை ஈடுபட்டு வருகிறோம், அதே வேளையில் படத்தின் தரத்தை இன்னும் மேம்படுத்துவதற்காக அங்கு கடும் உழைப்பைக் கொடுத்து கொண்டிருக்கும் இயக்குனர் சுகுமாரின் அர்ப்பணிப்பிற்கு தலை வணங்குகிறேன். எனது முதல் படம் நடித்த பிறகு ஒரு வருடம் படம் இல்லாமல் இருந்தேன். சுகுமார் சார் அப்போது 'ஆர்யா' படத்துடன் வந்தார். 'ஆர்யா' படம் இல்லை என்றால் இன்று நான் இல்லை. எனது வாழ்க்கையின் முன்னேற்றத்தில் அவருக்கு பெரிய பங்கு உண்டு" என்று கூறினார்.

மேலும் செய்திகள்