< Back
சினிமா செய்திகள்
Idli Kadai  movie update: Dhanush announces release date
சினிமா செய்திகள்

'இட்லி கடை' படத்தின் அப்டேட்: ரிலீஸ் தேதியை அறிவித்த தனுஷ்

தினத்தந்தி
|
8 Nov 2024 11:24 AM IST

'இட்லி கடை' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிப்பதாக கூறப்படுகிறது.

சென்னை,

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த 'பவர் பாண்டி', 'ராயன்' போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இப்படங்களையடுத்து, தனுஷ் இயக்கி இருக்கும் படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'. இப்படம் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இது தனுஷின் 52வது திரைப்படமாகும். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும், அருண்விஜய், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இத்திரைப்படத்தில், திருச்சிற்றம்பலம் படத்திற்கு பிறகு தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி, இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'இட்லி கடை' படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று தனுஷ் தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்