< Back
சினிமா செய்திகள்
Idiots...with limited brains - Amitabh Bachchans take on rumours
சினிமா செய்திகள்

'முட்டாள்கள்...குறைந்த மூளையுடையவர்கள்' - வதந்திக்கு அமிதாப்பச்சன் காட்டம்

தினத்தந்தி
|
9 Dec 2024 9:13 AM IST

அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வந்தன.

மும்பை,

1994-ம் ஆண்டு உலக அழகி என்ற பட்டத்தை பெற்றவர் ஐஸ்வர்யா ராய். இவர் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா (13) என்ற மகள் இருக்கிறார்.

இதற்கிடையில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், விரைவில் இவர்கள் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும் பரவலாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தன. சமீபத்தில், மும்பையில் நடந்த பிரம்மாண்டமான விருந்து நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இணைந்து ஒன்றாக கலந்து கொண்டனர். அது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்தநிலையில் நடிகர் அமிதாப்பச்சன், வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக காட்டமாக வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதன்படி, அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

'முட்டாள்கள்...குறைந்த மூளை கொண்டவர்கள். இந்த உலகில் அத்தகையவர்களுக்கு ஒருபோதும் பஞ்சமில்லை. அறிவு குறைபாடுகளை மறைப்பதற்காக ஒவ்வொரு நாளும் தங்களின் சொந்த பொய்யான கருத்துகளை உருவாக்கி பரப்புகிறார்கள்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்