'இதுபோன்ற படங்களில் நடிக்க விரும்புகிறேன்' - ஓப்பனாக பேசிய நடிகை டாப்சி
|கடந்த ஆண்டு டாப்சி பாலிவுட்டில் நடித்த படம் 'டன்கி'.
சென்னை,
'ஆடுகளம்' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்சி. 'வந்தான் வென்றான்', 'ஆரம்பம்', 'காஞ்சனா-2', 'கேம் ஓவர்' போன்ற பல படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள டாப்சி, இந்தியிலும் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.
இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். சமீபத்தில் இவர் பாலிவுட்டில் நடித்த படம் 'டன்கி'. ஹிரானி இயக்க ஷாருக்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் ரூ. 400 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் டாப்சி, பெரிய ஹீரோக்களுடன் நடிக்க விரும்புவதாக ஓப்பனாக கூறினார். இது குறித்து அவர் கூறுகையில்,
'பெரிய ஹீரோவுடன் நடிக்கும்போது, அந்த படம் வெற்றியடைய வேண்டும் என்ற அழுத்தம் என் மீது இருக்காது. 'டன்கி' படத்தில் இருந்ததுபோல. அப்படத்தில், இயக்குனர் ஹிரானி மற்றும் ஷாருக்கான் மீதுதான் அழுத்தம் இருந்தது. எந்த அழுத்தமும் இல்லாமல், இதுபோன்ற படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஒரு பெரிய ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தால், நல்ல கதாபாத்திரம், நல்ல கதை இல்லை என்றாலும் அதில் நடிப்பேன்' என்றார்