'சினிமா இல்லை என்றால் நானும் இருக்க மாட்டேன்' - பிரபல நடிகர் பரபரப்பு பேச்சு
|50 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் உள்ள இவர் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
சென்னை,
கேரள திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இதுவரை ஏராளமான சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அண்மையில், இவரது நடிப்பில் வெளியான 'டர்போ' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
சுமார் 50 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் உள்ள மம்முட்டி, 'சினிமா இல்லை என்றால் நானும் இருக்க மாட்டேன்' என்று பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில்,
'படங்கள் எனக்கு மூச்சு விடுவது போன்றது. சினிமா இல்லை என்றால் நானும் இருக்க மாட்டேன். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக, ரசிகர்கள் கொடுக்கும் தைரியம் மற்றும் அன்பினால் இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறேன். அவர்களை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்.
ஆனால் அவர்கள் என்னை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பார்கள் என்று எனக்கு தெரியாது. ஒரு வருடம்? பத்து வருடம்? அல்லது பதினைந்து வருடங்கள்? அவ்வளவுதான். உலகம் முடியும் வரை மக்கள் என்னை நினைவில் வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கக்கூடாது. அது யாருக்கும் நடக்காது. ஆயிரக்கணக்கான நடிகர்களில் நானும் ஒருவன்' என்றார்.