< Back
சினிமா செய்திகள்
இந்தப் படத்துடன் எல்.சி.யுவை முடித்து விடுவேன் - லோகேஷ் கனகராஜ்
சினிமா செய்திகள்

இந்தப் படத்துடன் 'எல்.சி.யு'வை முடித்து விடுவேன் - லோகேஷ் கனகராஜ்

தினத்தந்தி
|
5 Nov 2024 3:08 PM IST

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினியின் 171-வது படத்தை இயக்கி வருகிறார்.

சென்னை,

'மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ' போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் வலம் வருகிறார். இவர் தற்போது ரஜினிகாந்த்தின் 171-வது படமான 'கூலி' படத்தை இயக்கி வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படத்தை தயாரித்து வருகிறார்.

அதாவது லோகேஷ் கனகராஜ் 'சினிமாட்டிக் யுனிவர்ஸ்' என்ற கான்செப்ட்டை தொடங்கி அதன் கீழ் பல படங்களை இயக்கி வருகிறார். இவர் இயக்கிய "கைதி, விக்ரம், லியோ" போன்ற படங்கள் எல்சியு – வின் கீழ் அடங்கும். அதனை தொடர்ந்து 'பென்ஸ்' படமும் எல்.சி.யு வில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் 'கைதி 2' திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் பேசிய லோகேஷ் கனகராஜ், "நான் அடுத்தது கைதி 2 திரைப்படத்தையும் ரோலக்ஸ் திரைப்படத்தையும் இயக்க இருக்கிறேன். 'விக்ரம் 2' படத்துடன் எல்.சி.யு முடிந்துவிடும் என்று நினைக்கிறேன்" என்று அதில் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் 'லியோ 2' படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தால் அந்த படத்தை இயக்கி இருப்பேன் என்றார்.

மேலும் செய்திகள்