< Back
சினிமா செய்திகள்
மதகஜராஜா படத்தின் ரிலீஸை அறிவித்தபோது நான் மிகவும் பயந்தேன் - சுந்தர் சி
சினிமா செய்திகள்

'மதகஜராஜா' படத்தின் ரிலீஸை அறிவித்தபோது நான் மிகவும் பயந்தேன் - சுந்தர் சி

தினத்தந்தி
|
5 Jan 2025 8:54 PM IST

சுந்தர் சி இயக்கியுள்ள மதகஜராஜா திரைப்படம் வருகிற 12-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சென்னை,

விஷால் மற்றும் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மதகஜராஜா'. இந்த படத்தை இயக்குனர் சுந்தர் சி இயக்கியுள்ளார். வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, 12 ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இந்நிலையில், 'மதகஜராஜா' 12 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 12-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையின் இன்று இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் சுந்தர் சி இப்படம் குறித்து பேசியுள்ளார். அதாவது, "மதகஜராஜா படத்தின் ரிலீஸை அறிவித்தபோது நான் மிகவும் பயந்தேன். ரொம்ப வருடத்திற்கு முன் எடுத்த படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கப்போகிறதோ என்று நினைத்தேன். சமூக வலைத்தளங்களில் கலாய்ப்பாங்களே என்றெல்லாம் நினைத்தேன். ஆனால், இப்படத்திற்கு கிடைக்கும் இப்படி ஒரு வரவேற்பை பார்த்து நானும், மொத்த படக்குழுவினரும் ஆச்சரியம் அடைந்து விட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்