'அவருடன் பணிபுரிய போகிறேன் என்று தெரிந்ததும்...'- 'ககன மார்கன்' பட நடிகை
|விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் 'ககன மார்கன்'
சென்னை,
'ஹிட்லர்' படத்தையடுத்து விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் 'ககன மார்கன்'. இந்த படத்தை அட்டக்கத்தி, பீட்சா, இன்று நேற்று நாளை, மாயவன் உள்ளிட்ட படங்களில் எடிட்டராக பணிபுரிந்த லியோ ஜான் பால் இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் படமாகும்.
தீப்சிகா, அஜய் தீஷன், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரிகடா, வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 'ககன மார்கன்' திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் பணியாற்றிய அனுபவத்தை நடிகை தீப்சிகா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'லியோ ஜான் பால் இயக்கும் முதல் படத்தில் நான் பணியாற்றப் போகிறேன் என்பதை அறிந்ததும் மிகவும் உற்சாகப்பட்டேன். எனக்குப் பிடித்த பல படங்களுக்கு அவர் தொகுப்பாளராக இருந்துள்ளார். படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர் ரம்யா. நான் அஜய்க்கு ஜோடியாக நடிக்கிறேன்
விஜய் ஆண்டனி சார் மிகவும் இனிமையானவர். அவருடன் பணிபுரிவது மிகவும் வசதியாக இருந்தது ' என்றார்.