ஆலியா பட்டுடன் நடித்தபோது மனதளவில் பாதிக்கப்பட்டதாக கூறும் இளம் நடிகர்
|ஜிக்ரா படத்தில் நடிகை ஆலியா பட்டிற்கு சகோதரராக வேதாங் ரெய்னா நடித்து இருக்கிறார்.
மும்பை,
ஜோயா அக்தர் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓ.டி.டியில் வெளியான படம் 'தி ஆர்ச்சீஸ்'. இப்படத்தின் மூலம் இளம் நடிகர் வேதாங் ரெய்னா சினிமாவில் அறிமுகமானார் . தற்போது இவர் 'ஜிக்ரா' படத்தில் நடித்து வருகிறார். இது சகோதர பாசத்தை காட்டும் விதமாக உருவாகி உள்ளது.
இப்படத்தில், நடிகை ஆலியா பட்டிற்கு சகோதரராக வேதாங் ரெய்னா நடித்துள்ளார். அடுத்த மாதம் 11-ம் தேதி இப்படம் வெளியாக உள்ளநிலையில், சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இப்படத்தில் நடித்தபோது மிகவும் மனதளவில் பாதிக்கப்பட்டதாக வேதாங் ரெய்னா கூறியுள்ளார், இது குறித்து அவர் கூறுகையில்,
'படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் மிகவும் உணர்வுபூர்வமான காட்சியில் நடித்திருந்தேன். அந்த காட்சியில் நடித்து முடித்த பிறகு ஆலியா பட் அந்த கதாபாத்திரத்திலிருந்து உடனே வெளியே வந்துவிட்டார். ஆனால், அது எனக்கு எளிதாக இல்லை. என்னால் அதிலிருந்து வெளியே வர 2 முதல் 3 மணி நேரம் ஆனது. இது என்னை மனதளவில் கொஞ்சம் பாதித்தது' என்றார்.