< Back
சினிமா செய்திகள்
‘I want to do a straight Tamil film with Vetrimaaran’ - Jr NTR

Image Courtecy: Instagram@@DevaraMovie

சினிமா செய்திகள்

இந்த இயக்குனருடன் நேரடி தமிழ் படம்...- ஓப்பனாக கேட்ட ஜூனியர் என்.டி.ஆர்

தினத்தந்தி
|
18 Sept 2024 7:09 AM IST

'தேவரா' படக்குழு புரொமோசன் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

சென்னை,

நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் 30-வது படத்தை இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். இப்படத்துக்கு 'தேவரா பாகம்-1' என்று பெயரிடப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்து, ஐதராபாத் ஆகிய பகுதிகளில் மிக தீவிரமாக நடைபெற்று முடிந்தது. சமீபத்தில், இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன.

வருகிற 27-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், படக்குழு புரொமோசன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழு கலந்துகொண்டது. இதில், ஜூனியர் என்.டி.ஆர், ஜான்விகபூர், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ஜூனியர் என்.டி.ஆர், 'எனக்கு மிகவும் பிடித்த, இயக்குனர் வெற்றிமாறன் சார் என்னை வைத்து ஒரு படம் பண்ணுங்க. அதை நேரடியாக தமிழில் எடுத்து தெலுங்கில் டப் செய்யலாம், என்றார்

மேலும் செய்திகள்