< Back
சினிமா செய்திகள்
I want to be known for my performance, not just dancing - Reeshma Nanaiah
சினிமா செய்திகள்

'மக்கள் என்னை நடனத்திற்காக இல்லாமல், நடிப்பிற்காக நினைவில் வைக்க வேண்டும்' - நடிகை ரீஷ்மா

தினத்தந்தி
|
20 Dec 2024 11:06 AM IST

தற்போது உபேந்திரா இயக்கி நடித்திருக்கும் ‘யுஐ’ படத்தில் கதாநாயகியாக ரீஷ்மா நடித்துள்ளார்.

சென்னை,

பிரபல கன்னட நடிகை ரீஷ்மா நானையா. இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'ஏக் லவ் யா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படம் நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. அதன்பிறகு, பல படங்களில் நடித்திருக்கும் இவர் நடனத்தின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

தற்போது இவர் உபேந்திரா இயக்கி நடித்திருக்கும் 'யுஐ' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளநிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய ரீஷ்மா, நடனத்திற்காக மட்டுமில்லாமல், நடிப்பிற்காகவும் மக்கள் தன்னை நினைவில் வைக்க விரும்புவதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'எனது இந்த பயணம் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. நடனம் எனது பலம், ஆனால் மக்கள் என்னை நடனத்திற்காக மட்டுமில்லாமல், நடிப்பிற்காகவும் நினைவில் வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்' என்றார்.

ரீஷ்மா, 'யுஐ' படத்தையடுத்து, துருவா சர்ஜா மற்றும் சஞ்சய் தத்துடன் 'கேடி - தி டெவில்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்