'இன்னும் என்னால் அதை...' - மறைந்த நடிகர் இர்பான் கானை நினைவுக்கூர்ந்த இயக்குனர்
|இயக்குனர் ஷுஜித் சிர்கார் தற்போது 'ஐ வாண்ட் டு டாக்' படத்தை இயக்கி உள்ளார்.
மும்பை,
பிரபல பாலிவுட் இயக்குனர் ஷுஜித் சிர்கார். இவர் தற்போது 'ஐ வாண்ட் டு டாக்' படத்தை இயக்கி உள்ளார். அபிஷேக் பச்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வரும் 22-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், மறைந்த பாலிவுட் நடிகர் இர்பான் கானை, ஷுஜித் நினைவுக்கூர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
' ஐ வாண்ட் டு டாக்' படக்கதையை எழுதும்போது இர்பான் கானை மனதில் வைத்திருந்தேன். இர்பானின் மரணத்தை என்னால் இன்னும் கடந்து வர முடியவில்லை. என்னுள் நிறைய குற்ற உணர்வுகள் உள்ளன. அதை எப்படி தீர்ப்பது என்றே தெரியவில்லை. அவர் எனது படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் அது முடியவில்லை. அவரது மகன் பில் எனது அடுத்த படத்தில் நடிக்கிறார். அனால், இர்பான் இடத்தை நிரப்புவது மிகவும் கடினம்' என்றார்.
பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான். இவர் இந்தி மட்டுமில்லாமல் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் இருந்த இவர் கடந்த 2020-ம் ஆண்டு உயிரிழந்தார்.
மறைந்த நடிகர் இர்பான் கானும் இயக்குனர் ஷுஜித் சிர்காரும் சிறந்த நண்பர்கள். இவர்கள் இருவரும் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'பிகு' படத்தில் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.