'அயோத்தி' திரைப்பட வாய்ப்பை தவறவிட்டதற்கு வருந்துகிறேன் - ஆர்.ஜே. பாலாஜி
|ஆர்.ஜே. பாலாஜி நடித்துள்ள 'சொர்க்கவாசல்' படம் வருகிற 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சென்னை,
"நானும் ரவுடிதான், எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன், புகழ்" போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி. ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையை தொடங்கிய இவர் தற்போது படங்களில் நடிப்பதோடு கிரிக்கெட் போட்டிகளில் தனக்கே உரித்தான பாணியில் வர்ணனையாளராக இருந்து ரசிகர்களை வியப்பூட்டி வருகிறார். நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'மூக்குத்தி அம்மன்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரே இயக்கி நடித்த 'சிங்கப்பூர் சலூன்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இவர் தற்போது பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் 'சொர்க்கவாசல்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியானது. ஸ்வீப் ரைட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதையை இயக்குனர் உடன் தமிழ்ப் பிரபா, அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து எழுதியுள்ளார்கள். மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999-ல் நடக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் நடைப்பெற்ற கலந்துக் கொண்ட ஆர்.ஜே பாலாஜி சில சுவாரசிய தகவல்களை கூறினார். அதில் " சசிகுமார் நடித்து வெற்றிப்படமாக அமைந்த அயோத்தி திரைப்படத்தின் வாய்ப்பு முதலில் எனக்கு வந்தது ஆனால் அப்பொழுது இருந்த சூழ்நிலையில் என்னால் நடிக்க முடியவில்லை. அப்படத்தை நான் மிஸ் பண்ணதுக்காக வருத்தம் எனக்குள் இருக்கிறது. சசிகுமார் நடித்த பிறகு அந்த படம் எனக்கு மிகவும் பிடித்தது" என கூறினார். அத்துடன் ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படத்திலும் தான் தான் ஹீரோவாக நடிக்க இருந்ததாகவும் கூறியுள்ளார்.
அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் அயோத்தி எனும் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இந்த படத்தில் சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் இணைந்து பிரீத்தி ஆஸ்ரானி, புகழ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஆர்.ஜே. பாலாஜி அடுத்ததாக சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.