'வாழ்வில் நான் செய்த பயனற்ற செலவு' - நாக சைதன்யாவை சாடிய சமந்தா
|நடிகை சமந்தா மற்றும் வருண் தவான், நேர்காணல் ஒன்றில் ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக்கொண்டனர்.
சென்னை,
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு மொழியில் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர், பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்.
தற்போது, இவர் ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் தொடரின் இந்தி பதிப்பான 'சிட்டாடல் ஹனி பனி'யில் நடித்துள்ளார். இதில் நடிகர் வருண் தவான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தத் தொடரில் சிக்கந்தர் கெர், எம்மா கேனிங், கே கே மேனன் மற்றும் சாகிப் சலீம் ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர்.
இயக்குனர் ராஜ் மற்றும் டிகே இயக்கியுள்ள இந்த தொடர், கடந்த 7-ந் தேதி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இந்நிலையில், நடிகை சமந்தா மற்றும் வருண் தவான், நேர்காணல் ஒன்றில் ஒருவரையொருவர் கேள்வி கேட்டுக்கொண்டனர்.
அப்போது வருண் தவான், சமந்தாவிடம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்த பயனற்ற செலவு என்றால் எதனைச் சொல்வீர்கள் என்று கேட்டார். அதற்கு சமந்தா, என்னுடைய முன்னாள் கணவருக்கு நான் செய்த செலவுகள் என்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.