< Back
சினிமா செய்திகள்
I havent seen Sridevi with Janhvi Kapoor yet - Famous director
சினிமா செய்திகள்

'ஜான்விகபூரிடம் இன்னும் ஸ்ரீதேவியை பார்க்கவில்லை' - பிரபல இயக்குனர்

தினத்தந்தி
|
5 Jan 2025 7:11 AM IST

சர்ச்சைக்கு மிகவும் பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா

சென்னை,

சர்ச்சைக்கு மிகவும் பெயர் போன இயக்குனர் ராம் கோபால் வர்மா. நாகார்ஜுனாவை வைத்து தெலுங்கில் 1989ம் ஆண்டு இயக்கிய சிவா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தெலுங்கில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று சிவா படத்தை ரீமேக் செய்திருந்தார்.

அதன் பின்னர், ரங்கீலா, சத்யா, ஜங்கிள், கம்பெனி, பூத் என ஏகப்பட்ட ஹிட் படங்களை இவர் கொடுத்துள்ளார். இந்நிலையில்,நேர்காணல் ஒன்றில் இயக்குனர் ராம் கோபால் வர்மா, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை பற்றி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

'ஸ்ரீதேவி மிகவும் திறமை வாய்ந்தவர். அவர் நடித்திருந்த பதினாறு வயது படத்திற்கு பிறகு அவரை நான் ஒரு இயக்குனராக பார்ப்பதை விட்டுவிட்டு ரசிகராக பார்க்க ஆரம்பித்தேன். அதுதான் அவரது சக்தி. இன்னும் ஜான்வி கபூரிடம் அதை நான் பார்க்கவில்லை. அவரை வைத்து படம் எடுக்கும் திட்டமும் இப்போதைக்கு இல்லை' என்றார்.

மேலும் செய்திகள்