கங்குவா படத்தை 100-க்கும் அதிகமுறை பார்த்துவிட்டேன், தாக்கம் குறையவில்லை - மதன் கார்க்கி
|கங்குவா படத்தை 100-க்கும் அதிகமுறை பார்த்துவிட்டேன், தாக்கம் குறையவில்லை என பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியுள்ளார்.
சென்னை ,
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் 14-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், சைனீஸ், ஸ்பானிஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தநிலையில், இப்படத்தின் பிறமொழி டப்பிங்கிலும் சூர்யாவின் குரலே ஏ.ஐ தொழில் நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா மற்றும் கங்குவா படக்குழுவினர் புதுடெல்லியில் படத்திற்கான புரமோஷன் பணியில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் கங்குவா படம் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து படக்குழு மூலம் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அந்த வரிசையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி கங்குவா படம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,
இன்று கங்குவா திரைப்படத்தை முழுமையாக பார்த்தேன். டப்பிங் செய்யும் போது ஒவ்வொரு காட்சியையும் நூறு முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன், ஆனாலும் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போது படத்தின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காட்சிகளின் பிரம்மாண்டம், கலையின் நுணுக்கம், கதையின் ஆழம் மற்றும் இசையின் கம்பீரம் அனைத்தும் ஒரு பவர்ஹவுஸ் செயல்திறனுடன் இணைந்து சூர்யாவின் நடிப்பு, இதை உருவாக்கிய மிகச்சிறந்த கலைப் படைப்புகளில் ஒன்றாக்குகிறேன்.
"இயக்குனர் சிறுத்தை சிவா உருவாக்கி இருக்கும் மிரட்டலான அனுபவத்திற்கு மனமார்ந்த நன்றிகள். இவரின் கனவுகளை நனவாக்கிய ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.