'என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே...' - மொட்டை அடித்து அலகு குத்திய நடிகை
|சரண்யா, திருத்தணி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தி உள்ளார்.
சென்னை,
நடிகர் பரத் நடிப்பில் கடந்த 2004-ம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான படம் காதல். இதில், கதாநாயகியாக நடித்த சந்தியாவின் தோழியாக நடித்து பிரபலமானவர் நடிகை சரண்யா.
இதனைத்தொடர்ந்து, 2009-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பேராண்மை படத்திலும் சரண்யா நடித்திருந்தார். மேலும், இவர் துள்ளுற வயசு, ஒரு வார்த்தை பேசு ஆகிய படங்களில் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார். தற்போது இவர் நடிப்பை விட்டுவிட்டு எடிட்டிங் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் சரண்யா, திருத்தணி முருகன் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தி உள்ளார். அதனுடன், முருகனுக்கு பூஜை செய்து, நாக்கில் அலகு குத்தி இருக்கிறார். இது குறித்தான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, 'என்னையே தந்துவிட்டேன் கந்தனிடமே... அவன் என்ன செய்தாலும் எனக்கு சம்மதமே' என பதிவிட்டுள்ளார்.