< Back
சினிமா செய்திகள்
I feel blessed that Mohanlal, Priyadarshan and Venkat Prabhu cast me in their films: Komal Sharma
சினிமா செய்திகள்

'இந்த படங்களில் எல்லாம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்' - கோமல் சர்மா

தினத்தந்தி
|
22 Jan 2025 9:31 AM IST

கடந்த ஆண்டு வெளியான தி கோட், விடுதலை 2 , பரோஸ் உள்ளிட்ட படங்களில் கோமல் சர்மா நடித்திருந்தார் .

சென்னை,

விஜய்யின் தி கோட், வெற்றி மாறனின் விடுதலை 2 மற்றும் மோகன்லாலின் பரோஸ் உட்பட கடந்த ஆண்டு பல முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களுடன் நடிகை கோமல் சர்மா பணியாற்றி இருக்கிறார்.

இந்நிலையில், இந்த படங்களில் எல்லாம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்று நடிகை கோமல் சர்மா கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'வெற்றிமாறன் இயக்கிய விடுதலை 2 படத்தில் நடிக்க என்னை அணுகியபோது உடனடியாக ஓகே சொன்னேன். மஞ்சு வாரியருடன் ஒரு படம் பண்ணியிருக்கிறேன். விஜய் சேதுபதி சாருடன் முதல்முறையாக பணியாற்றி இருந்தேன். வெங்கட் பிரபுவின் தி கோட், மோகன்லாலுடன் பரோஸ் ஆகிய படங்களில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம்'என்றார்.

மேலும் செய்திகள்