
'இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு' - துல்கர் சல்மான்

கடந்த 2012ம் ஆண்டு வெளியான 'செக்கண்டு சோவ்' திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானவர் துல்கர் சல்மான்.
சென்னை,
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துல்கர் சல்மான். மலையாள நடிகர் மம்முட்டியின் மகனான இவர், கடந்த 2012ம் ஆண்டு வெளியான 'செக்கண்டு சோவ்' என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
அதை தொடர்ந்து தீவரம், பட்டம் போலே, சலலாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் சினிமாவில் அறிமுகமாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, இவர் நடித்து வரும் 'காந்தா' படக்குழு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்தது.
இதை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட துல்கர் சல்மான் அதன் உடன், 'இந்த மாதிரி காலத்தால் அழியாத கதையில் நான் காலத்தால் அழியாத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இது எனது 13வது திரைப்பயணத்தில் கிடைத்தது மிகப்பெரிய பரிசு' என குறிப்பிடப்பட்டுள்ளார்.