< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
அஜித் கை கொடுத்து தூக்கி விட்ட எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன் - மகிழ்திருமேனி

27 Jan 2025 6:01 AM IST
மோகன்லால் நடித்திருக்கும் எல் 2 எம்புரான் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
சென்னை,
அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடாமுயற்சி. இப்படம் அடுத்த மாதம் 6-ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், மோகன்லால் நடித்திருக்கும் எல் 2 எம்புரான் படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில், படக்குழுவினருடன் விடாமுயற்சி இயக்குனர் மகிழ்திருமேனியும் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
"அஜித் சார் கை கொடுத்து தூக்கி விட்ட எத்தனையோ பேர்களில் நானும் ஒருவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். எனக்கு ஆதரவு கொடுத்ததற்கு நன்றி. பிப்.6-க்காக காத்திருக்கிறேன். அந்த தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள காத்திருக்கிறேன்"என்றார்.