< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

'ஐ அம் காதலன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

தினத்தந்தி
|
26 Oct 2024 9:52 PM IST

நஸ்லேன் நடித்துள்ள 'ஐ அம் காதலன்' படம் வருகிற நவம்பர் மாதம் 7-ம் தேதி வெளியாகவுள்ளது.

சென்னை,

இந்தாண்டு மலையாளத்தில் வெளியான பிரேமலு திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தை கிரிஷ் ஏடி இயக்கியிருந்தார். இப்படத்தில் நஸ்லேன், மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். இப்படம் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து நஸ்லன் மற்றும் இயக்குனர் கிரிஷ் இணைந்து பணியாற்றிய 'ஐ அம் காதலன்' என்ற படம் தயாராகி உள்ளது. இந்த படத்தில் நஸ்லேன் கதாநாயகனாக நடித்துள்ளார். திரைப்படம் வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் ஒரு சைபர் கிரைம் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நஸ்லேன் ஒரு ஹேக்கர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. அடுத்ததாக கிரிஷ் இயக்கத்தில் நஸ்லேன் 'பிரேமலு 2' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நஸ்லேன் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்