< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கமல் ரசிகை நான்... இப்போது ரஜினி ரசிகையாக மாறிவிட்டேன் - நடிகை அபிராமி
|21 Sept 2024 7:04 AM IST
கமல் ரசிகை நான்... இப்போது ரஜினி ரசிகையாக மாறிவிட்டேன் என்று நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள புதிய படம் வேட்டையன். இப்படத்தில் அமிதாப்பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியார், அபிராமி உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்நிலையில், வேட்டையன் படத்தின் டீசர், இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை அபிராமி பேசியதாவது, 'கமல் சாருடைய ரசிகை நான்... இந்த படத்தில் (வேட்டையன்) நடித்ததில் இருந்து ரஜினி சார் ரசிகையாக மாறிவிட்டேன்' என்றார்.