< Back
சினிமா செய்திகள்
நான் சராசரி நடிகைதான் - சமந்தா பேட்டி
சினிமா செய்திகள்

நான் சராசரி நடிகைதான் - சமந்தா பேட்டி

தினத்தந்தி
|
18 Oct 2024 4:46 AM IST

சமந்தா நடித்துள்ள சிட்டாடல் வெப் தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையான சமந்தாவுக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தற்போது 'சிட்டாடல்: ஹனி பன்னி' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் சமந்தா அளித்துள்ள பேட்டியில், "நான் இப்போதும் சராசரி நடிகைதான். இன்னும் நடிப்பில் முதிர்ச்சியை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறேன். எனது சினிமா பயணத்தில் எத்தனையோ வெற்றிகளை சந்தித்து இருந்தாலும் அவை அனைத்துக்கும் கூட்டுமுயற்சிதான் காரணம். ஒரு படத்துக்கு பின்னால் நிறைய நிபுணர்களின் உழைப்பு இருக்கிறது.

ஒரு திரைப்படத்துக்கு பின்னால் திறமையான குழுவினர் இருந்தால்தான் நமது திறமை வெளியே வரும். நான் திறமையான குழுவினர் மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இது எனது அதிர்ஷ்டம்" என்றார்.

மேலும் செய்திகள்