< Back
சினிமா செய்திகள்
Hrithik Roshan to start Krrish 4 shoot after wrapping War 2
சினிமா செய்திகள்

ஹிருத்திக் ரோஷனின் 'கிரிஷ் 4' குறித்து வெளியான முக்கிய தகவல்

தினத்தந்தி
|
28 Dec 2024 10:23 AM IST

ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ படம் கிரிஷ்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன். இவர் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ படம் கிரிஷ். இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றநிலையில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாகின. அதன்படி, கடைசியாக இதன் 3-ம் பாகம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது.

இதனையடுத்து, 4-ம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், 10 ஆண்டுகளை கடந்தும் இது தொடர்பான அரிவிப்பு வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், கிரிஷ் 4 குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதன்படி, ஹிருத்திக் ரோஷன் தற்போது நடித்து வரும் வார் 2 படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு கிரிஷ் 4 படப்பிடிப்பில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

'வார் 2' படத்தை 'பிரம்மாஸ்திரா' பட இயக்குனர் அயன் முகர்ஜி இயக்குகிறார். ஹிருத்திக் ரோஷனுடன் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் செய்திகள்