இணையத்தில் வைரலாகும் தான்யாவின் கவர்ச்சி படங்கள்
|நடிகை தான்யா, அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'ரெட்ட தல' படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
பழம்பெரும் நடிகர் மறைந்த ரவிச்சந்திரனின் பேத்தியான தான்யா, சசிகுமார் நடிப்பில் வெளியான 'பலே வெள்ளையத்தேவா' படத்தின் மூலமாக அறிமுகமானார். பின்னர், 'பிருந்தாவனம்', 'கருப்பன்', 'நெஞ்சுக்கு நீதி', 'மாயோன்', 'ரசவாதி' போன்ற படங்களில் நடித்த தான்யா, தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது நடிகை தான்யா, நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'ரெட்ட தல' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த இப்பட விழாவில் அவர் உடுத்திய சேலை பரபரப்பாக பேசப்பட்டது.
இதுவரை குடும்பப்பாங்கான படங்களில் நடித்து வந்த தான்யா, தற்போது கிளாமராக நடிக்க சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, இவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன. இந்த படங்களை பார்த்த ரசிகர்களும் தான்யாவின் அழகை புகழ்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்களாம்.