< Back
சினிமா செய்திகள்
கே.ஜி.எப் பட தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு
சினிமா செய்திகள்

கே.ஜி.எப் பட தயாரிப்பு நிறுவனத்தின் புதிய பட அறிவிப்பு

தினத்தந்தி
|
15 Nov 2024 5:32 PM IST

ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவித்துள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1, கே.ஜி.எப் 2 திரைப்படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக ஹோம்பலே பிலிம்ஸ் மாறியுள்ளது. இயக்குநர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸை வைத்து சலார் படத்தினை இயக்கினார். இந்தப் படத்தினையும் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரித்தது. இப்படம் ரூ.700 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

இந்நிலையில், ஹோம்பலே பிலிம்ஸின் அடுத்த 3 படங்களில் நடிக்க பிரபாஸ் ஒப்பந்தம் செய்துள்ளார். இதனை முன்னிட்டு சலார் 2 திரைப்படத்தின் பணிகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2026, 2027, 2028 ஆகிய ஆண்டுகளில் 3 படங்கள் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில் பிரபாஸ் நடிக்க இருக்கும் மூன்று திரைப்படங்களை தயாரிக்கப் போவதாக ஹோம்பலே நிறுவனம் அறிக்கை மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.. அதன்படி சலார் 2 படத்தின் மூலம் இந்த பயணம் தொடங்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஹோம்பலே நிறுவனம் மீண்டும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது . அந்த அறிவிப்பின்படி நாளை மாலை 3.33 மணி அளவில் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. அந்த போஸ்டரில் "நம்பிக்கை சவாலாக மாறும்போது அவர் தோன்றுவார்" என்ற வசனம் இடம் பெற்றுள்ளது. அத்துடன் இந்த படம் இந்தி, கன்னடம், தெலுங்கு ,தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்திய அளவில் வெளியாகும் எனவும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்