< Back
சினிமா செய்திகள்
Hollywood director joins Yashs Toxic
சினிமா செய்திகள்

யாஷின் 'டாக்சிக்' படத்தில் இணைந்த ஹாலிவுட் இயக்குனர்

தினத்தந்தி
|
9 Nov 2024 3:45 PM IST

'டாக்சிக்' படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

சென்னை,

யாஷ் கடைசியாக கேஜிஎப் 2 படத்தில் நடித்திருந்தார். அதனையடுத்து, டாக்சிக் மற்றும் நித்தேஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்திலும் நடித்து வருகிறார். இதில், 'டாக்சிக்' படத்தை பிரபல நடிகையும் இயக்குனருமான கீது மோகன் தாஸ் இயக்குகிறார்.

கேவிஎன் புரோடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு கர்நாடகாவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் இப்படமானது 2025 ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹாலிவுட் இயக்குனர் ஒருவர் இப்படத்தில் இணைந்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் படங்களான ஜான் விக், பாஸ்ட் அண்ட் பியூரியஸ் போன்ற படங்களுக்கு பெயர் பெற்ற அதிரடி இயக்குனர் ஜேஜே பெர்ரி. இவர் தற்போது, யாஷின் 'டாக்சிக்' படக்குழுவில் இணைந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்