'நடிக்க முடியாது, அழகாக இல்லை' என்று கூறிய தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுத்த ஹாலிவுட் நடிகை
|பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி, சமீபத்தில் வெளியான 'இம்மாகுலேட்' படத்தில் நடித்திருந்தார்.
வாஷிங்டன்,
பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி. யுபோரியா மற்றும் தி ஒயிட் லோட்டஸ் மூலம் புகழ் பெற்ற இவர் சமீபத்தில் வெளியான 'இம்மாகுலேட்' படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தன்னைப்பற்றி பிரபல தயாரிப்பாளர் ஒருவர் பேசிய கருத்துக்கு தற்போது பதிலளித்துள்ளார்.
"டெட் ரிங்கர்ஸ்," "பாதர் ஆப் தி ப்ரைட்" மற்றும் "பபி தி வாம்பயர் ஸ்லேயர்" உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளர் பாம். இவர் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த நேர்காணல் ஒன்றில் நடிகை ஸ்வீனி "அழகில்லை" மற்றும் "நடிக்க முடியாது" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தொழில்துறையில் ஒருவரையொருவர் எவ்வாறு நடத்துகிறார்கள் என்பது குறித்து பேசி, தயாரிப்பாளரின் முந்தைய கருத்துகளுக்கு நடிகை ஸ்வீனி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
" பெண்களே மற்ற பெண்களை இழிவுப்படுத்துவதைப் பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. பெண்கள் மற்ற பெண்களுக்கு அதிகாரம் அளிக்கின்றனர் என்று எல்லோரும் கூறுகிறார்கள். அது எதுவும் உண்மையில்லை. அவை அனைத்தும் போலியானது' என்றார். ஸ்வீனி சிட்னி விரைவில் யூபோரியாவின் மூன்றாவது சீசனில் நடிக்கவுள்ளார்.