< Back
சினிமா செய்திகள்
Hitched finally !!!Baahubali actor gets married at the age of 47
சினிமா செய்திகள்

47 வயதில் திருமணம் செய்த பாகுபலி நடிகர்

தினத்தந்தி
|
27 Nov 2024 8:28 PM IST

விஜய் நடிப்பில் வெளியான 'போக்கிரி' படத்தில் நடித்து தமிழில் பிரபலமானவர் சுப்பராஜு.

சென்னை,

ஆந்திர மாநிலம் பீமாவரத்தைச் சேர்ந்தவர் நடிகர் சுப்பராஜு. இவர் கடந்த 2002-ம் ஆண்டு கிருஷ்ண வம்சி இயக்கத்தில் வெளியான 'கட்கம்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு வெளியான 'அம்மா நன்னா ஓ தமிழா அம்மை' படம் இவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.

பின்னர், ஆர்யா, போக்கிரி, பில்லா, கலேஜா, பாகுபலி: தி கன்க்ளூசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சுப்பா ராஜு கடைசியாக கடந்த மே மாதம் வெளியான 'ஜிதேந்தர் ரெட்டி' படத்தில் நடித்திருந்தார்.

தற்போது இவருக்கு 47 வயதாகும்நிலையில், திருமணம் முடிந்துள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை சுப்பராஜு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மனைவி குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்