தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த டாப் 6 படங்கள்
|தமிழ் சினிமாவில் பல படங்கள் அதிக வசூல் குவித்துள்ளன.
சென்னை,
தமிழ் சினிமாவில் நடிகர்களின் பல படங்கள் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெறுகின்றன. அவ்வாறு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று அதிக வசூல் குவித்த டாப் 6 படங்களை தற்போது காணலாம்.
1.எந்திரன் 2.0
கடந்த 2010-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் எந்திரன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து எந்திரன் 2.0 உருவானது. ரஜினி, அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவான எந்திரன் 2.0 ரூ. 660 கோடிக்கு மேல் வசூலித்து முதல் இடத்தில் உள்ளது.
2. லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் லியோ. விஜய், திரிஷா, மடோனா, சஞ்சய் தத், அர்ஜுன் நடிப்பில் வெளியான இப்படம் ரூ.615 கோடிக்கு மேல் வசூலித்து 2-வது இடத்தில் உள்ளது.
3. ஜெயிலர்
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கடந்த ஆண்டு வெளியான படம் ஜெயிலர். சிவ ராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான இப்படம் ரூ. 607 கோடிக்கு மேல் வசூலித்து 3-வது இடத்தில் உள்ளது.
4. பொன்னியின் செல்வன் பாகம்-1
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் 'பொன்னியின் செல்வன் பாகம்-1'. விக்ரம், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் ரூ.498 கோடிக்கு மேல் வசூலித்து 4-வது இடத்தில் உள்ளது.
5. விக்ரம்
கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரூ.460 கோடிக்கு மேல் வசூலித்து 5-வது இடத்தில் உள்ளது.
6. பொன்னியின் செல்வன் பாகம்-2
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் 'பொன்னியின் செல்வன் பாகம்-2'. விக்ரம், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் ரூ.343 கோடிக்கு மேல் வசூலித்து 6-வது இடத்தில் உள்ளது.