< Back
சினிமா செய்திகள்
Hey Minnale video song from Amaran released
சினிமா செய்திகள்

'அமரன்' படத்தின் 'ஹே மின்னலே' வீடியோ பாடல் வெளியானது

தினத்தந்தி
|
13 Nov 2024 8:02 PM IST

'அமரன்' படத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடல் 'ஹே மின்னலே.

சென்னை,

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளி பண்டிகையில் வெளியான படம் 'அமரன்'. ராஜ்கமல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிய இப்படத்தில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர். உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாளில் ரூ.42.3 கோடியை வசூலித்தது.

தற்போது வரை இப்படம் உலகளவில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இப்படத்தில் இடம்பெற்று மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பாடல் 'ஹே மின்னலே'. தற்போது இப்பாடலின் வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்