
'தண்டேல்' படத்தின் முதல் விமர்சனம்

வருகிற 7-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் தண்டேல் வெளியாக உள்ளது.
சென்னை,
பிரபல தெலுங்கு இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தண்டேல். நாக சைதன்யாவின் கெரியரில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.
கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் அல்லு அரவிந்த் மற்றும் பன்னி தாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம், வருகிற 7-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் படக்குழுவினருக்கு தண்டேல் படம் திரையிடப்பட்டது. இப்படத்தை பார்த்துவிட்டு தயாரிப்பாளர்கள் அல்லு அரவிந்த் மற்றும் பன்னி தாஸ் ஆகியோர் முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளனர். அதன்படி, தண்டேல் படத்திற்கு 100க்கு 100 மதிப்பெண்கள் கொடுப்பதாக கூறியுள்ளனர்.
மேலும் பன்னி தாஸ், நாக சைதன்யா கெரியரில் ரூ.100 கோடி வசூல் செய்த முதல் படமாக இப்படம் இருக்கும் என்றும், நாக சைதன்யாவும் சாய் பல்லவியும் தங்கள் நடிப்பால் மாயாஜாலம் செய்துள்ளனர் என்றும் கூறினார்.