கைவிடப்பட்டதா சூர்யாவின் 'கர்ணா'? - காரணம் என்ன?
|முதன்முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகியது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சென்னை,
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் கடந்த 14-ம் தேதி வெளியான படம் 'கங்குவா'. இதுவரை ரூ.150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சூர்யா இப்படத்தைத்தொடர்ந்து, சூர்யா 45, வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடிக்க உள்ளார்.
மேலும், மகாபாரத கதைக்களத்தைக் கொண்டு உருவாகும் 'கர்ணா' படத்திலும் சூர்யா நடிக்கிறார். இதில், அவர் கர்ணனாக நடிக்கிறார். ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இந்தப் படத்தை இயக்க திரவுபதியாக ஜான்வி கபூர் நடிக்கிறார். முதன்முறையாக சூர்யாவுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
இப்படத்தை இரண்டு பாகங்களாக ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 'கங்குவா' படத்தின் விமர்சனங்களுக்கு மத்தியில், 'கர்ணா' படத்தை படக்குழு கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகப்படியான பட்ஜெட்டில் உருவாக்க திட்டமிட்டது, படக்குழு இந்த முடிவை எடுக்க காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இன்னும் இது தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
j