< Back
சினிமா செய்திகள்
Harry Potter star Maggie Smith has passed away
சினிமா செய்திகள்

ஹாரி பாட்டர் பட பிரபலம் மேகி ஸ்மித் காலமானார்

தினத்தந்தி
|
28 Sept 2024 7:54 AM IST

ஹாரி பாட்டர் படங்களில் இவர் ஏற்று நடித்த புரொபசர் மெக்கோனகல் கதாபாத்திரம் மிகவும் பிரபலமானது.

வாஷிங்டன்,

பிரபல ஹாலிவுட் நடிகை மேகி ஸ்மித். இவர் 'தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி', 'ஹாரி பாட்டர்', 'டோவ்ன்டன் அபே' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக ஹாரி பாட்டர் படங்களில் இவர் ஏற்று நடித்த புரொபசர் மெக்கோனகல் கதாபாத்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. தற்போது 89-வயதான இவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல் நல பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனை அவரது மகன்கள் தெரிவித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து , மேகி ஸ்மித் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். ரசிகர்களும் ஹாரி பாட்டர் படங்களில் அவர் பேசிய வசனங்களை வலைத்தளத்தில் பகிர்ந்து இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

மேகி ஸ்மித் கடந்த 1969-ம் ஆண்டு வெளியான 'தி பிரைம் ஆப் மிஸ் ஜீன் பிராடி' என்ற படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்றார். அதனைத்தொடர்ந்து தனது இரண்டாவது ஆஸ்கர் விருதை 1978ல் 'கலிபோர்னியா சூட்' படத்துக்காக வென்றார். மிகச்சிறந்த பிரிட்டிஷ் நடிகைகளில் ஒருவராக போற்றப்படும் இவர், ஏழு முறை ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்