< Back
சினிமா செய்திகள்
Harbhajan Singhs biopic to be made soon - do you know who the actor is?
சினிமா செய்திகள்

விரைவில் படமாகும் ஹர்பஜன் சிங்கின் வாழ்க்கை வரலாறு - நடிகர் யார் தெரியுமா?

தினத்தந்தி
|
1 Dec 2024 2:51 PM IST

ஹர்பஜன் சிங் தற்போது ஓவியாவுடன் இணைந்து 'சேவியர்' படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ள இவர், நடிப்பதிலும் ஆர்வம் கொண்டு, தமிழில் அர்ஜுன், சதீஷ், லாஸ்லியா ஆகியோருடன் இணைந்து பிரண்ட்ஷிப் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த இவர், தற்போது, ஓவியாவுடன் இணைந்து சேவியர் படத்தில் நடித்து வருகிறார். சமீபகாலமாக, இவரின் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்தநிலையில், தற்போது அதனை ஹர்பஜன் சிங் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'எனது வாழ்க்கையில் இருந்து இரண்டு மூன்று நல்ல விஷயங்களை இந்த உலகத்திற்கு காண்பிக்க விரும்புகிறேன். விரைவில் அது குறித்து அறிவிப்பேன். அதன்படி, வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டால் எனது கதாபாத்திரத்தில் நடிக்க விக்கி கவுசல் சரியாக இருப்பார் என்று நினைக்கிறேன்' என்றார்.

விக்கி கவுஷல் தற்போது ராஷ்மிகா மந்தனாவுடன் இணைந்து சாவா படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஆகியோருடன் இணைந்து லவ் அண்ட் வார் படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்