எல்.சி.யுவில் 3-வது இசையமைப்பாளராக இணைந்த சாய் அபயங்கர்
|சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய 'கட்சி சேர' மற்றும் 'ஆச கூட' பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
சென்னை,
பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு வாரிணி தம்பதியின் மகன் சாய் அபயங்கர். இவர் இசையமைத்து பாடிய 'கட்சி சேர' மற்றும் 'ஆச கூட' பாடல்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'பென்ஸ்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ளார்.
இது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவாகும் 2-வது படமாகும். ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த 'விக்ரம், கைதி, லியோ' போன்ற படங்களைபோல எல்.சி.யுவின் வரிசையில் வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், எல்.சி.யுவில் இணைந்தது குறித்து சாய் அபயங்கர் பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'எல்.சி.யுவில் ஏற்கனவே இரண்டு இசையமைப்பாளர்கள் (அனிருத் மற்றும் சாம் சிஎஸ்) உள்ளனர், நான் மூன்றாவதாக இணைவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். 'பென்ஸ்' படத்தில் ஒவ்வொரு ஒவ்வொரு பாடலும் வித்தியாசமாக இருக்கலாம். படத்தில் கிட்டத்தட்ட ஏழு முதல் எட்டு பாடல்கள் உள்ளன' என்றார்.