தந்தையர் தினம்: ஒரு அன்பான தந்தை...நயன்தாராவின் பதிவு வைரல்
|விக்னேஷ் சிவன் தனது 2 குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நயன்தாரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
சென்னை,
இன்று உலகம் முழுவதும் உலக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல திரையுலக பிரபலங்கள் தங்கள் தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சினேகா உள்பட பல நடிகைகளும் இன்ஸ்டாவில் தந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் தனது இரண்டு குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நயன்தாரா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் உள்ள காட்சிகளை பார்க்கும்போது அவரும் குழந்தையாக மாறி உயிர் மற்றும் உலகம் குழந்தைகளை கொஞ்சும் காட்சிகள் உள்ளன.
ஒரு அன்பான தந்தை தனது குழந்தைகளிடம் எப்படி நடந்து கொள்வார் என்பதை இந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது என சமூகதளவாசிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த வீடியோ குறித்து இயக்குனர் விக்னேஷ் சிவன், 'என்னுடைய வாழ்க்கையில் உள்ள மொத்த மகிழ்ச்சிக்கும் காரணம் இந்த உயிர் மற்றும் உலகம் ஆகிய இரண்டு குழந்தைகள் என்றும் அவர்களை நான் மிகவும் நேசிக்கிறேன் என்றும் விக்னேஷ் சிவன் அதில் பதிவு செய்துள்ளார். மேலும் அவர் நயன்தாராவையும் கேப்ஷன் செய்துள்ள நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.