< Back
சினிமா செய்திகள்
ஜி.வி.பிரகாஷின் கிங்ஸ்டன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட்
சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷின் 'கிங்ஸ்டன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட்

தினத்தந்தி
|
5 Jan 2025 6:50 PM IST

ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரின் 25-வது படத்திற்கு கிங்ஸ்டன் என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்குகிறார்.

இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம். இந்த படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். பேச்சுலர் படத்திற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடிகர் கமல்ஹாசன் சென்னையில் கடந்த நவம்பர் 10ம் தேதி தொடங்கி வைத்தார். கடல் பின்னனியில் திகில் சாகச படமாக உருவாகி வரும் இந்த படத்தில் கடலில் உள்ள மர்மத்தை கண்டறியும் மீனவரின் கதாபாத்திரத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்களிடம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6.01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்