மார்வெல் சினிமாடிக் யுனிவர்சில் நீண்ட கால கதாபாத்திர நடிகர் யார் தெரியுமா?
|மார்வெல் சினிமாடிக் யுனிவர்சில் நீண்ட காலமாக நடிக்கும் சாதனையை 'பிளேடு' வெஸ்லி பெற்றுள்ளார்.
மார்வெல் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக, அவெஞ்சர்ஸ் படம் அனைவருக்கும் பிடித்த படமாக உள்ளது. அதில் வரும் ஹீரோக்களுக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அயர்ன் மேன், ஹல்க், தோர், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா, நடாசா போன்ற ஏராளமான கதாபாத்திரங்கள் அடங்கிய தொகுப்பு 'மார்வெல் சினிமாடிக் யுனிவர்ஸ்' ஆகும்.
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் அதே கதாபாத்திரத்தில் நடித்தவர்கள் யார் என்று பார்ப்போம். அந்த வகையில் முதல் இடத்தில் இருப்பது வெஸ்லி.
சமீபத்தில் வெளியான 'டெட்பூல் & வோல்வரின்' படத்தில் எதிர்பாரவிதமாக 'பிளேடு' வேடத்தில் வெஸ்லி மீண்டும் தோன்றியுள்ளார். அவர் முதன்முதலில் 1998-ம் ஆண்டு வெளியான 'பிளேடு' திரைப்படத்தில் அறிமுகமானார். 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தக் கதாபாத்திரத்தில் நடித்து சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னதாக, 2000-ம் வெளியான 'எக்ஸ்-மேன்' திரைப்படத்தில் வோல்வரில் கதாபாத்திரத்தில் தோன்றிய ஹக் இந்த சாதனையை தன் வசம் வைத்திருந்தார். இந்த சாதனை ஹக்கிடம் 'டெட்பூல் & வோல்வரின்' படத்தில் வெஸ்லி தோன்றும்வரை மட்டுமே இருந்தது.
அடுத்தபடியாக, டாக்டர் ஆக்டோபஸ் கதாபாத்திரம் 2004-ம் ஆண்டு வெளியான ஸ்பைடர் மேன் 2 படத்தில் தோன்றி நீண்ட இடைவெளிக்கு பிறகு 2021-ம் ஆண்டு வெளியான "ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்" படத்தில் மீண்டும் தோன்றியுள்ளது. இந்தபடம் சுமார் 17 ஆண்டு இடைவெளியை கொண்டுள்ளது.