< Back
சினிமா செய்திகள்
குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் இளமை தோற்றம்!
சினிமா செய்திகள்

'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்தின் இளமை தோற்றம்!

தினத்தந்தி
|
11 Oct 2024 2:39 PM IST

நடிகர் அஜித்தின் புதிய புகைப்படம் ஒன்றை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை,

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். சமீபத்தில் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் நடிகர் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் கடந்த சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்தது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்புகள் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. அவருடன் அவர் குடும்பத்தினரும் தங்கியுள்ளதாகத் தெரிகிறது. முக்கியமான சில சண்டைக்காட்சிகளும் பாடலும் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

.இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் அஜித்தின் புதிய தோற்றத்தை வெளியிட்டு, "குட் பேட் அக்லி படப்பிடிப்பில்" எனக் குறிப்பிட்டுள்ளார். வெள்ளை முடியுனே பார்த்து வந்த ரசிகர்களுக்கு இந்தப் புகைப்படம் மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படம் 'விடாமுயற்சி'. மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்