82வது கோல்டன் குளோப் விருது விழா- சிறந்த படம் 'தி ப்ருட்டலிஸ்ட்'
|‘தி ப்ரூடலிஸ்ட்’ படம் 3 முக்கிய கோல்டன் குளோப் விருதுகளை தட்டிச் சென்றது.
ஹாலிவுட்டில் ஆஸ்கருக்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற விருது வழங்கும் விழாவாக கோல்டன் க்ளோப் விருது விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த நிகழ்வின் 82 ஆவது விருது விழா கலிபோர்னியாவில் நடைபெற்றது.
'தி ப்ரூடலிஸ்ட்' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை என 3 முக்கிய கோல்டன் குளோப் விருதுகளை தட்டிச் சென்றது. போருக்குப் பிந்தைய அமெரிக்காவின் வடிவமைப்பைப் பற்றிய இந்த படத்தை இயக்கிய பிராடி கார்பெட்டிக்கு சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. இப்படத்தின் நாயகன் அட்ரியன் பிராடி சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.
'எமிலியா பெரெஸ்' திரைப்படம் சிறந்த துணை நடிகை, ஆங்கிலம் அல்லாத பிற மொழியில் சிறந்த படம் என 2 கோல்டன் குளோப் விருதுகளை தட்டிச் சென்றது.
இந்தியாவிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட 'ஆல் வி இமேஜின் அஸ் லைட்' திரைப்படம் விருது வெல்லும் வாய்ப்பை இழந்தது.