'கோட்' படத்தின் டிரெய்லர் வெளியீடு எப்போது? படக்குழு அறிவிப்பு
|'கோட்' படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 17 ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை,
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய். மேலும், மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையானவராக காட்டி இருக்கிறார் வெங்கட்பிரபு. எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.
நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.முன்னதாக, கோட் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
இந்த நிலையில் கோட் படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 17 ம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது.
கோட் படம் அடுத்த மாதம் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.